உலகம்

12 மணி நேரத்தில் 5 நிலநடுக்கம், 36 நில அதிர்வுகள்: சோகத்தில் துருக்கி, உலக நாடுகள் உதவிக்கரம்!

Published

on

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நேன்று அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை தேசிய துக்கமாக துருக்கி அரசு அறிவித்து ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கிறது.

#image_title

இந்நிலையில் துருக்கியில் 12 மணி நேரத்தில் சிறியதும் பெரியதுமாக 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 36 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அங்குள்ள ஆய்வு மையங்கள் கூறுகின்றன. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கியில் சீட்டுக்கட்டு போல கட்டிடங்கள் சரிந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது உலக நாடுகளை கவலையளிக்க வைத்துள்ளது. இன்று காலை வரை துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 8 மடங்காக உயரும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்சாரம், கியாஸ், பெட்ரோல் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லாமல் துருக்கி மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். துருக்கியை மீட்க அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில் உலக நாடுகள் பலவும் துருக்கிக்கு மீட்புப் படை மற்றும் நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

#image_title

ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து தவிக்கும் துருக்கி மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது. பெரும் உயிர் இழப்புகள், காயங்கள் மற்றும் அழிவுகளால் நான் வேதனைப்படுகிறேன். இந்த சோக நேரத்தில் இரு நாட்டு மக்களுக்கும் எனது இதயம் நெகிழ்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என கூறியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version