இந்தியா

ஒமிக்ரான் பரவல் எதிரொலி: தள்ளிப்போகிறதா ஐந்து மாநில தேர்தல்?

Published

on

ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் 5 மாநில தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை பார்த்து வருகிறோம். கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில மாநிலங்களில் விரைவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையிலும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என சமீபத்தில் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி இருந்தது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் ஐந்து மாநிலத் தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் 5 மாநில தேர்தல்களை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version