இந்தியா

காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை எதிர்க்க முடியுமா? 5 மாநில தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

Published

on

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைய வேண்டும் என மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் உள்பட ஒரு சில தலைவர்கள் கூறி வரும் நிலையில் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளதை அடுத்து காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை எதிர்க்க முடியாது என்று கூறப்பட்டு வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிதான் 15 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கோவாவில் பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் மணிப்பூரிலும் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது .

உத்தர பிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸ் இன்னும் ஒற்றை இலக்கங்களில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் இருக்கும் ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ் என்பதால் காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை எதிர்க்க கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணி மீண்டும் ஒரு சரிவை தான் சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version