இந்தியா

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை

Published

on

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிபூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் படிப்படியாக நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக வந்த தேர்தல் முன்னிலை அறிவிப்பில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சற்று முன் வெளியான தகவலின்படி உத்தரப்பிரதேச 15 பாஜக இடங்களிலும் சமாஜ்வாதி 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. பஞ்சாபில் பாஜக 4 இடங்களிலும் உத்தரகாண்டில் பாஜக இரண்டு இடங்களிலும் கோவாவில் பாஜக மூன்று இடங்களிலும் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version