தமிழ்நாடு

சென்னையில் சோகம்: கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Published

on

சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமியை குளித்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மூழ்கியதை அடுத்து அவரை காப்பாற்ற சென்றநிலையில் மேற்கொண்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை அருகே நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அருகில் உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் சாமியை குளிப்பாட்டினர்.

25 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 10 பேர் குளிக்க முற்பட்ட நிலையில் 5 பேர் குளத்தில் மூழ்கினர். நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்ற நிலையில் தற்போது முதல் கட்டமாக 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சாமி ஊர்வலத்தின் போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராகவன், லோகேஷ்வரன், பானேஷ், சூர்யா உள்பட உயிரிழந்த 5 பேரும் தன்னார்வலர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version