Connect with us

ஆரோக்கியம்

கோடைக் காலத்தில் நாம் அறியாமல் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்!

Published

on

கோடைக் காலத்தில் அதிகரிக்கும் சூட்டால், தலைவலி குமட்டல், வெப்ப பக்கவாதம், de-hydration, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே தான் கோடைக்காலம் வந்த உடன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை என்று கூறுகிறார்கள்.

கோடைக் காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் உடலின் தேவைகள் மாறும். இந்த கோடைக் காலத்தில் நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்தி, சரியான ஆரோக்கியத்தை பேணுவது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

வெயிலில் சென்று வந்த உடன் குளிர் நீர் குடிப்பது

கோடைக் காலத்தில் வெளியில் சென்று வந்த உடன், பிரிட்ஜில் உள்ள குளிர்ச்சியான நீரை குடிப்பது, ஜூஸ் குடிப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் இப்படி வெயில் சூட்டில் சென்று வந்த உடன் குளிர் நீர், ஜீஸ் குடிப்பது உங்கள் உடலை அதிகளவில் பாதிக்கும். தொண்டை வலி, செரிமான தொல்லைகள் ஏற்படும். எனவே வெளியில் சென்று வந்த உடன் சாதாரண நீரைப் பருகுவதே நல்லது. பிரிட்ஜில் உள்ள நீரைக் குடிப்பதை தவிர்க்கவும்.

காபி குடித்தல்

தலை வலி ஏற்படும் போது காபி குடிப்பதை வழக்கமாகப் பலர் வைத்துள்ளார்கள். காப்பியில் உள்ள காஃபின் தலைவலியைப் போக்கும். ஆனால் காஃபின் உடலில் உள்ள அதிக நேரை உரிஞ்சும். எனவே கோடையில் டீ, காபி குடிப்பது உங்கள் தலைவலியை அதிகரிக்கும்.

குளிர்பானங்கள் குடித்தல்

மிகவும் குளிரூட்டப்பட்ட, பேக் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அதிக சர்க்கரை இருக்கும். இது உங்களுக்குத் தற்காலிகமாக அதிக ஆற்றலை அளிக்கும். ஆனால் ஒரு சில நாட்களில் ஆற்றலைக் குறைத்துவிடும். எனவே பழ ஜூஸ், நாட்டு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ் போன்றவற்றைக் குடிப்பதே சிறந்தது.

டையட்

பலர் கோடைக்காலத்தில் உணவுக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும் என்று திட்டமிடுவார்கள். ஆனால் மந்தநிலை, தலைவலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். இது போன்ற டையட்களை தவிர்த்து ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது தான் ஆற்றலுடனும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும்.

முட்டை, மீன் மற்றும் சிக்கனை தவிர்த்தல்

முட்டை, மீன் மற்றும் சிக்கன் போன்றவற்றைக் கோடைக் காலத்தில் சாப்பிட்டால் உடல் சூட்டை ஏற்படுத்தும் என்று பலரும் தவிர்ப்பார்கள். ஆனால் அது தவறு. இந்த மூன்றிலும் அதிக புரதம் உள்ளது. இவை கோடைக்காலத்திலும் சரியான உடல் எடையுடன் உங்கள் உடல் எடையை வைத்துக்கொள்ள உதவும். ஆனால் ஆட்டுக் கறி, பீப் மற்றும் பன்றிக்கறியை தவிர்க வேண்டும்.

இந்த கோடைக் காலத்தில் என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதை விட, ஆரோக்கியத்தை எப்படி பேணிக் காப்பது என்று திட்டமிடுவதே முக்கியம்.

ஆன்மீகம்9 நிமிடங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்24 நிமிடங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்35 நிமிடங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்49 நிமிடங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு59 நிமிடங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்17 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!