சினிமா செய்திகள்

டிவிட்டர் சண்டையை கிளப்பிய 5 மணி காட்சி – நேரடி மோதலில் விஷ்ணுவிஷால் – ஆர்.ஜே. பாலாஜி

Published

on

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள எல்.கே.ஜி படம் வரும் 22ம் தேதி அதிகாலை 5 மணிக்கே ரிலீசாகும் அந்தஸ்த்தை பெற்றுள்ளது.

இதனை விமர்சிக்கும் விதமாக நடிகர் விஷ்ணு விஷால், 5 மணிக் காட்சிக்கு உண்டான அந்தஸ்த்தே போய்விட்டது. யாருக்கெல்லாம் கிடைக்குது பாரு.. என்ற ட்வீட்டை பதிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்ட, ஆர்.ஜே. பாலாஜி, நானும் முதலில் அதை நம்பவில்லை, பின்னர் திரையரங்க உரிமையாளரை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொண்டேன். இது கேட்டு வாங்கிய இடமில்லை. மெரீட் மூலம் கிடைத்த ஒன்று என பதிவிட்டார்.

இதற்கு, மெரினா புரட்சி என்கிற பேரில் நீ செய்தது எல்லாம் எனக்கு தெரியாது, அரசியல் விமர்சனம் என போலி விளம்பரத்தின் மூலம் பிரபலமடைய நினைக்காதே என்றார்.

இதற்கு அப்பா தீயணைப்பு துறை தலைவராக இல்லை. மேலும் எனக்கு யாரும் விளம்பரம் செய்ய வேண்டாம் என வீடியோ பதிவையும் பதிவிட, விஷ்ணு விஷாலுக்கு ஆத்திரம் பொங்கி வலிந்து சண்டை மேலும் பூதாகரமானது.

இதற்கிடையே சமரச பேச்சுவார்த்தைகள் பி.ஆர்.ஓ.க்கள் தரப்பில் நடந்து, பின்னர் ட்வீட்டுகள் டெலிட் செய்யப்பட்டு, பேசி தீர்த்துக் கொண்டோம். பிரச்சனை ஏதுமில்லை எனவும் உழைப்பை மதிக்கிறேன் என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version