தமிழ்நாடு

திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை: கொரோனா பரவலால் அதிரடி நடவடிக்கை!

Published

on

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது என்பதும் அதனை அடுத்து பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னை தி நகர் ரங்கநாதன் தெரு உள்பட முக்கிய இடங்களில் உள்ள அங்கன்வாடி தடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி திருத்தணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 5 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து கூறுகையில் திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு இன்று முதல் 5 நாள் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் கொரோனா தொற்று பரவாமல் இருக்க திருத்தணி கோயில் தரிசனத்திற்கு தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை மலை கோவிலில் நடக்கும் தெப்ப உற்சவத்தை இணையதளத்தில் பக்தர்கள் காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் திருத்தணி கோயிலுக்கு ஆடிக்கிருத்திகை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு இன்று முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை திருத்தணி கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version