சினிமா செய்திகள்

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

Published

on

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் 1 நடிகராக விஜய் உருவாகிவிட்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் எனக் கட்சியைத் தொடங்கினார். மேலும் முழு அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

#image_title

இந்நிலையில் விஜய் மறுத்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

தூள்

விக்ரம் நடிப்பில் தரணி இயக்கி 2003-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் தூள். முதலில் இந்த கதையைத் தரணி விஜய்க்குக் கூறியுள்ளார். ஆனால் அதில் தனக்கான முக்கியத்துவம் இல்லை என அவர் நிராகரித்துவிட்டார்.

முதல்வன்

ஷங்கர் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் முதல்வன். முதலில் இந்த கதையை விஜய்க்குத் தான் ஷங்கர் கூறியுள்ளார். ஆனால் அரசியல் சார்ந்த கதை என்ற காரணத்திற்காக விஜய் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

சண்டக்கோழி

லிங்குசாமி இயக்கத்தில் 2005-ம் ஆண்டு ரிலீஸாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் சண்டக்கோழி. ஆனால் இந்த கதையின் முதல் பாதியைக் கேட்ட விஜய் நிராகரித்துவிட்டார். பின்னர் படம் மிகப் பெரிய வெற்றிபெற்ற பிறகு லிங்குசாமியை அழைத்துப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கம்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து 2010-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் சிங்கம். இந்த கதையும் விஜய் கேட்டு காரணம் ஏதும் கூறாமல் நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீனா

2001-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் தீனா. இந்த கதையும் விஜய்க்குத்தான் முதல் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தையும் விஜய் தனக்குக் கதை பிடிக்கவில்லை என நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version