தொழில்நுட்பம்

48 மெகா பிக்சல் கேமராவை அறிமுகம் செய்யும் ஹுவாய்.!

Published

on

ஹானர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹுவாய் நிறுவனம், விரைவில் தனது புது ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. உலகின் முதல் 48 மெகா பிக்சல் கொண்ட கேமரா அமைப்புடன் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இத்துடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் இல் ஹானர் ஆள் வியூ டிஸ்பிளே மற்றும் கோனார் லிங்க் டர்போ சேவை முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் ஹுவாய் நிறுவனத்தின் உலகின் முதல் கிரீன் 910 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பிராசஸர் மூலம் 20 சதவீதம் கூடுதல் வேகம் மற்றும் 40 சதவீதம் செயல்திறன் ஏ.ஐ மற்றும் கிராபிக்ஸ் உடன் அதிவேகமாக செயல்படுகிறது.

சோனி நிறுவனத்தின் புதிய 48 மெகா பிக்சல் IMX586 சென்சார் பொருந்திய கேமரா சேவை ஹானர் வியூ 20 இல் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த புகைப்பட மற்றும் வீடியோ சேவையை ஜூம் செய்யும்போது இந்த சோனி சென்சார்கள் வழங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரா சேவை ஏ.ஐ மற்றும் என்.பி.யு சேவையுடன் இணைந்து மிரட்டலான அனுபவத்தை வழங்குகிறது.

ஹானர் நிறுவனம் உலகின் முதல் ஆள் வியூ டிஸ்பிளே சேவையை அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் இன்-ஸ்கிரீன் கேமரா டிஸ்பிளே இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரத்தியேக 18 அடுக்கு தொழில்நுட்ப உருவாக்கத்தில் இந்த ஆள் வியூ டிஸ்பிளேயின் இன்இ பில்ட் கேமரா உருவாக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version