Connect with us

இந்தியா

470 விமானங்களை இயக்க 6500 பைலட்டுக்களை தேடும் ஏர் இந்தியா.. செம வேலைவாய்ப்பு..!

Published

on

இந்திய அரசிடம் ஏர் இந்தியா நிறுவனம் இருக்கும்போது நஷ்டத்தில் இருந்த நிலையில் அதை டாடா நிறுவனம் வாங்கி தற்போது லாபகரமாக மாற்றியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்த 470 புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் அளித்துள்ளது என்பதும் இந்த ஒப்பந்தம் காரணமாக அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்த 470 புதிய விமானங்களை இயக்குவதற்கு 6500க்கும் மேற்பட்ட விமானிகள் தேவைப்படுவதாகவும் எனவே விமானிகள் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு செம வேலை வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.

தற்போது, ஏர் இந்தியா தனது 113 விமானங்களை இயக்குவதற்கு சுமார் 1,600 பைலட்டுகளை கொண்டுள்ளது. சமீபகாலங்களில், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மிக நீண்ட தூர விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், தாமதமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்களில் தற்போது 850 விமானிகள் 54 விமானங்களை இயக்கி வருகின்றனர். அதேபோல் விஸ்டாராவில் 600 க்கும் மேற்பட்ட விமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து 220 விமானங்களை இயக்குவதற்கு 3,000க்கும் மேற்பட்ட விமானிகளைக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்கள் புதியதாக ஆர்டர் செய்திருக்கும் நிலையில் ஒரு போயிங் விமானத்திற்கு 26 பைலட்டுகள் தேவை என்றும், 10 போயிங் விமானங்களை அறிமுகப்படுத்தினால், அதற்கு 260 விமானிகள் தேவைப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஏர் பஸ் ஏ 320 விமானத்திற்கு 12 பைலட்டுகள் தேவை என்றும் தெரிகிறது.

புதியதாக ஆர்டர் கொடுக்கப்பட்ட விமானங்கள் நாளையே வரப்போவதில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களை இயக்க சுமார் 6500 என்ற தேவையான எண்ணிக்கையிலான விமானிகள் தேவை என்றும், அவர்களை பயிற்சி மூலம் உருவாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!