தமிழ்நாடு

ரோனாவை பரப்பிய கேரள மாணவிகள்: கோவையில் 46 மாணவிகள் பாதிப்பு!

Published

on

கேரளாவிலிருந்து வந்த மாணவிகளால் கோவை கல்லூரி ஒன்றில் 46 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும் அதனை அடுத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் திறந்ததிலிருந்து ஒரு சில கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவையில் உள்ள செவிலியர் கல்லூரி ஒன்றில் கேரளாவிலிருந்து மாணவிகள் சிலர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தனர். தற்போது கல்லூரி திறந்ததை அடுத்து மீண்டும் கல்லூரிக்கு அவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த மாணவியர்களுக்கு முறைப்படி கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்றும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதா என்று சோதனை செய்யவில்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்த மாணவிகள் மூலம் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக சுகாதாரத்துறை அந்த செவிலியர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் பரிசோதனை செய்தபோது மொத்தம் 46 மாணவிகளுக்கு கொரோனா பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டது.

ஒரே கல்லூரியில் 46 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது. தகுந்த சோதனை செய்யாமல் கேரள மாணவிகளை கல்லூரிக்குள் மற்றும் விடுதிக்குள் அனுமதித்தது தான் இதற்கு காரணம் என்று கல்லூரி நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக 2 தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கோவை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version