தமிழ்நாடு

சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு: என்ன காரணம்?

Published

on

சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் ஜனவரி 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பம் என்றும், பிப்ரவரி 4-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும், பிப்ரவரி 5ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி தினம் என்றும், பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மார்ச் 4ஆம் தேதி மேயரை தேர்ந்தெடுக்க மறைமுகமாகவோ தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் களாக 37 பேர் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கான ஆவணத்தை சமர்ப்பித்தால் வியாபாரிகளிடம் பணம் திருப்பித் தரப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version