இந்தியா

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: 24 மணி நேரத்தில் 43815 பேர் பாதிப்பு!

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வருடமாக இருந்துவரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மிக வேகமாக பரவி வருவது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43815 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் மொத்தம் 11,598,710 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 196 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் இந்தியாவில் மொத்தம் 159,790 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 22, 955 கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர் என்பதும் இந்தியாவில் மொத்தம் 11,128,119 பேர் இதுவரை குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஒரு சில நகரங்களில் இரவு நேர லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே ரீதியில் சென்றால் மீண்டும் இந்தியா முழுவதும் லாக்டவுன் வந்துவிடுமோ என்ற அச்சம் பொது மக்கள் மனதில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version