தமிழ்நாடு

கொளுத்தி போட்ட நிர்மல் குமார்.. இணையத்தில் டிரெண்ட் ஆகும் #420மலை.. அண்ணாமலை மீது அட்டாக்

Published

on

சென்னை: அண்ணாமலையை 420 என்று விமர்சனம் செய்துவிட்டு பாஜக நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இதையடுத்து தற்போது #420மலை என்ற டேக் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

இதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, அன்பு சகோதரர் திரு @CTR_Nirmalkumar அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும். என்று குறிப்பிட்டு உள்ளார். கட்சி மீட்டிங் ஒன்றில் அண்ணாமலை, நிர்மல் குமாரை அவமானப்படுத்தும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதான் அவரின் இந்த முடிவிற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

கொளுத்தி போட்ட நிர்மல் குமார்.. இணையத்தில் டிரெண்ட் ஆகும் #420மலை.. அண்ணாமலை மீது அட்டாக்

இதையடுத்து தற்போது #420மலை என்ற டேக் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்த கருத்தில், பாஜக மாநில ஐடி அணியின் தலைவர் ,பாஜக மாநில தலைவரின் இன்னொரு முகத்தை #420மலை என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். கட்சித் தலைவர் பதவியிலேயே இவ்வளவு ஊழல்! இவர்கள் எல்லாம் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்நாட்டை மொத்தமாக விற்றுவிடுவார்கள்., என்று ஜோதிமணி குறிப்பிட்டு உள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகி ஸலாம் மாஸ், சிக்கியது பல பேரின் வீடியோக்கள் பயத்தில் பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை ஒரு #420.. பாஜக கட்சியும் ஒரு #420.. என்று குறிப்பிட்டு உள்ளார். இதேபோல் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையை #420 மலை என்று கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version