இந்தியா

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா.. பட்ஜெட் கூட்டத் தொடர் என்ன ஆகும்?

Published

on

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் மறு உருவான ஓமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 1409 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். இந்த நேரத்தில் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்போது நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கொரோனா பரிசோதனையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் இருக்கும் மாநிலங்கள் மற்றும் பகுதிகளிலேயே செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இந்த கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version