இந்தியா

40% வருமான வரி, செல்வ வரி.. பிரதமருக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள்!

Published

on

கொரோனா வைரஸின் பாதிப்பால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சரி செய்ய 50 ஐஆர்எஸ் அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 50 நபர்கள் குழுவானது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 40 சதவீத வரி வசூலிக்கலாம். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களிடம் ஒரு முறை மட்டும் கோவிட்-19 செஸ் வரி 4% வசூலிக்கலாம் என்று பிரதமருக்குப் பரிந்துரை செய்யலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தகவல் கூறுகின்றன.

5 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்து இருந்தால் மீண்டும் செல்வ வரி வசூலிக்கலாம். 12 கோடி மிகவும் நலிந்த ஏழை மக்களுக்குக் குறைந்தது 6 மாதங்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கலாம்.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் வீடியோ சேவை நிறுவனங்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது கூடுதல் வரி வசூலிப்பு. சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிதி போன்றவையும் பிரதமரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version