வணிகம்

5 நாட்களில் 30 ஆயிரம் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அடுத்தடுத்த அறிவித்த 4 பிரபல நிறுவனங்கள்!

Published

on

ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே தொடங்கியுள்ளது.

2022-ம் ஆண்டு 1,168 நிறுவனங்கள் 2,43,468-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. அது 2023-ம் ஆண்டு ஆரம்பம் முதலே தொடங்கியுள்ளது ஐடி நிறுவன ஊழியர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2023-ம் ஆண்டு தொடங்கிய 5 நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அடுத்தடுத்த அறிவித்த 4 பிரபல நிறுவனங்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

அமேசான்

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் மற்றும் கிளவுட் சேவைகள் நிறுவனமாக உள்ள அமேசான் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்ய உள்ளது.

சேல்ஸ் ஃபோர்ஸ்

சேல்ஸ் ஃபோர்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் என 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

பெகாசிஸ்டம்ஸ்

மென்பொருள் நிறுவனமான பெகாசிஸ்டமஸ் 4 சதவிகித ஊழியர்கள் என மொத்தமாக 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

பைட் டான்ஸ்

டிக் டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version