தமிழ்நாடு

தலைமை செயலாளர் இறையன்பு எடுத்த முதல் அதிரடி நடவடிக்கை!

Published

on

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பதும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்தார். அவரது இந்த நியமனம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்றே கூறலாம்

இந்த நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அதிரடி உத்தரவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்த செந்தில்குமார் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக இருந்த ஜெகநாதன் பொது நிர்வாக துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

தேசிய மருத்துவ பணிகள் இயக்குனராக தாரேஸ் அகமது தமிழக சுகாதார திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தனிச் செயலாளரான உதயசந்திரன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டங்கள் அமலாக்கப்பிரிவையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version