தமிழ்நாடு

+2 பொதுத்தேர்வை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதன் காரணமாக மே 3ஆம் தேதி தொடங்கும் பிளஸ் டூ தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற ஐயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் நேற்று தமிழக அரசு பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெறும் என உறுதிபடக் கூறியது. ஆனால் அதே நேரத்தில் மே 3ஆம் தேதி நடைபெறும் மொழித்தேர்வு மட்டுமே மே 31ம் தேதிக்கு மாற்றி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து செய்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வு ஆகிய இரண்டும் பிளஸ் டூ மாணவர்களுக்கு உறுதியாக நடக்கும் என்பது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 4 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க பாடநூல் கழக இயக்குநர் ஜெயந்தி உள்பட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அவர்கள் அறிவித்துள்ளார். இதனையடுத்து பிளஸ் டூ தேர்வு நடக்கும் என்பது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version