உலகம்

ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்து சென்றாரா ஆப்கானிஸ்தான் அதிபர்: அதிர்ச்சி தகவல்!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தாலிபான்கள் படை ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கியது என்பதும் நேற்று அதன் தலைநகரைக் கைப்பற்றிய தாலிபான் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் துணை அதிபர் ஆகிய இருவரும் தலைமறைவானதாகவும் அவர் தஜகிஸ்தான் நாட்டில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறும் முன் அதிபர் அஷ்ரப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. பணத்தால் நிரப்பப்பட்ட நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உடன் ஆப்கன் அதிபர் தப்பித்து நாட்டை விட்டு சென்று விட்டதாகவும், நிரப்பப்பட முடியாத அளவுக்கு மீதமிருந்த பணம் அப்படியே விட்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அந்நாட்டு அதிபர் எடுத்துச்சென்ற பணம் கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுவதால் நாட்டு மக்கள் மத்தியிலும் தாலிபான்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version