சினிமா செய்திகள்

3டி பேய் பயமுறுத்தியதா? லிசா திரை விமர்சனம்!

Published

on

அஞ்சலி நடிப்பில் 3டியில் உருவாகியுள்ள லிசா திரை விமர்சனம் லோக்சபா தேர்தல் ரிசல்ட்டால், ஓபனிங் கிடைக்காமல் அடிவாங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சரி படம் எப்படியிருக்கு, அஞ்சலிக்கு இந்த படமாவது ரீஎண்ட்ரி கொடுத்துள்ளதா என்று பார்ப்போம்.

லிசா கதை என்ன?

அஞ்சலி, தனது தாத்தா பாட்டியை பிரிந்து வாழும் தன் அம்மாவை அவர்களுடன் மீண்டும் சேர்த்து வைக்க தனது காதலருடன் தாத்தா பாட்டி இருக்கும் மலைக்காட்டிற்கு செல்கிறார். அங்கு தனது அம்மாவையும் தாத்தா பாட்டியும் சேர்த்து வைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றதா? அல்லது இதற்கு இடையே பேய் யார் மீது ஏறிக் கொண்டு யாரையெல்லாம் என்ன பாடு படுத்துகிறது என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குநருக்கு வரவேற்பு:

அறிமுக இயக்குநர் ராஜூ வசந்த் 3டியில் பேய் படத்தை கொடுக்க வேண்டும் என்ற தனது முயற்சியில் நல்ல வெற்றியையே பதிவு செய்துள்ளார். ஆனால், முதல் பாதி சற்று இழுவையாக செல்வதை குறைத்திருந்தால், படம் இன்னும் ஹிட் படமாக மாறியிருக்கும். இரண்டாம் பாதியில் இவர் சொல்லும் கருத்துகள் இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதால், அறிமுக இயக்குநராக பாஸ் ஆகியுள்ளார் ராஜூ வசந்த்.

சில காட்சிகளில், பேயின் கை, கால்கள் 3டியில் நம் கண் முன்னே வந்து பீதியை கிளப்பும் இடங்களை பக்காவாக செய்துள்ளார். அதே திட்டமிடல், திரைக்கதையிலும் சற்று இருந்திருந்தால், லிசா இன்னொரு காஞ்சனாவாக மாறியிருப்பாள். இயக்குநர் சிறு வயதில் ஈவில் டெட் படத்தை பார்த்து, பேய் படங்களை ரசித்தவர் போல, அதன் தாக்கங்கள் நிறைய இடத்தில் அப்படியே இருக்கிறது.

அஞ்சலி கம்பேக்?

பலூன் படம் ஜெய் மற்றும் அஞ்சலிக்கு படுதோல்வியை கொடுத்த பேய் படம். ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு படத்தில், அஞ்சலி நெகட்டிவ் ரோலா அல்லது சூழ்நிலை கைதியா என்று தெரியாத அளவிற்கு ஒரு சின்ன ரோலில் வந்து சென்றார். ஆனால், இந்த படத்தில், பேய் புகுந்து அவர் செய்யும் அட்டகாசங்கள் அவரது நடிப்புக்கான பாராட்டுக்களை பெற்று தந்துள்ளன.

படத்தின் பலம் என்னவென்றால், ஹாரரை தாண்டி யோகிபாபு மற்றும் பிரம்மானந்தின் காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியுள்ளது. தியேட்டரில் இவர்கள் வரும் இடமெல்லாம் சிரிப்பு சத்தம் கியாரண்டி.

மொத்தத்தில் இந்த கோடை விடுமுறையின் கடைசி நேரத்தில் வந்துள்ள லிசா படம், 3டியில் வந்துள்ளதால், அந்த அனுபவத்தை உணர ஒரு முறை தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version