வணிகம்

2017-2022க்கு இடையில் 3,552 வெளிநாட்டு நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன!

Published

on

இந்தியாவில் 2017-2022க்கு இடையில் 3,552 வெளிநாட்டு நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில், செவ்வாயன்று கார்ப்பரேட் விவகார அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலின்படி, ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை மூடுவது என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனிப்பட்ட வணிக முடிவு. அதில் கிளை அலுவலகத்தின் செயல்பாடு நிறுத்தம் போன்ற காரணிகள் இருக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய அனுமதி அல்லது உரிமம் போன்றவற்றின் செல்லுபடியாகும் காலாம் முடிவு, தாய் நிறுவனத்தின் வணிகக் கொள்கையின் மாற்றத்தால் அதன் செயல்பாட்டைத் தொடங்காதது போன்ற பல காரணங்களால் இந்த நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கலாம்.

வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் மூடலுக்கும் இதுவே பெரும்பான்மையான காரணம் எனவும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எத்தனை வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள் உள்ளன என்ற கேள்விக்கு, இந்தியாவில் மொத்தமாக 14,137 நிறுவனங்கள் செயலில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-2022 ஆண்டுகளுக்கு இடையில் சீன செயலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையால் 1000-க்கு மேற்பட்ட சீன நிறுவனங்கள் தங்களது கிளைகள் மற்றும் துணை நிறுவனங்களை மூடின. இதனால் ஆயிரம் கணக்கானவர்கள் வேலையின்றி லிங்கிடு-இன் உள்ளிட்ட தளங்களில் வேலையைத் தேடி பல்வேறு பதிவுகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version