இந்தியா

புத்தாண்டுக்கு முந்தைய நாள் 33,000 ஆணுறை விற்பனை: ஒரே நபர் 80 வாங்கியதாகவும் தகவல்!

Published

on

புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆன்லைனில் 33 ஆயிரம் ஆணுறைகள் விற்பனையாகியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது என்பதும் அந்த புத்தாண்டு தினத்தில் உணவு வகைகள், குளிர்பான வகைகள் உள்பட பல பொருட்களை ஆன்லைனில் பொதுமக்கள் வாங்கி குவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஒரு சில மணி நேரத்தில் வீட்டிற்கு பொருட்கள் வந்துவிடுவதால் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் புத்தாண்டை கொண்டாடியவர்களில் அதிக அளவு ஆன்லைனில் என்ன பொருட்களை ஆர்டர் செய்தார்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதில் இந்தியாவில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் சுமார் 33 ஆயிரம் ஆணுறைகள் ஆர்டர் செய்துள்ளதாகவும் அதில் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டும் 80 ஆணுறைகளை வாங்கி உள்ளதாகவும் வெளிவந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அது மட்டுமின்றி சோடா குளிர்பானங்கள் ஆகியவை இலட்சக் கணக்கிலும் ஐஸ்கிரீம்கள் பாப்கார்ன் ஆகியவை ஆயிரக்கணக்கில் அமைந்ததாகவும் கொரோனா சுயசோதனை செய்யும் கருவியும் சுமார் பத்தாயிரம் ஆர்டர் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல் உணவு பொருட்களை பொறுத்தவரை ஸ்விகியில் ஒரு நிமிடத்திற்கு 7,200 ஆர்டர்களும், ஜொமைட்டோவிற்கு ஒரு நிமிடத்திற்கு 9 ஆயிரம் ஆர்டர்களும், வந்ததாகவும் அதிகாலை வரை ஆர்டர்கள் குவிந்து கொண்டே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் 33 ஆயிரம் ஆணுறைகள் ஆர்டர் வந்துள்ள தகவலை பார்த்ததும் நெட்டிசன்கள் இதுகுறித்த கேலியும் கிண்டலுமாக கமெண்ட்ஸ்களையும் மீம்ஸ்களையும் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

seithichurul

Trending

Exit mobile version