தமிழ்நாடு

பொங்கல் பரிசுத்தொகை அட்ராசிட்டி! கற்கள், செருப்புகளை வைத்து இடம் பிடித்த பொதுமக்கள்!!

Published

on

சத்தியமங்கலம் அருகே தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகையை வாங்குவதற்காக ரேஷன் கடைகளில் கல், பை ஆகியவற்றை வைத்து பொதுமக்கள் இடம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500யை குடும்பஅட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகையை  வழங்கும் பணி இன்று துவங்கியது. இந்த பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, ஏலக்காய், சர்க்கரை, கரும்பு போன்ற பொருள்களும்  வழங்கப்படுகிறது.

இதற்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த டோக்கன்களை வைத்து ரேஷன் கடைகளில் மக்கள் பரிசுப்பொருள்களை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். பல கிராமங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் கல், பை ஆகியவற்றை கொண்டு அதிகாலையிலேயே இடம் பிடித்தனர்.

இந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. கொரோனா காலகட்டம் என்பதால் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர். இந்த வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு ஜனவரி 13 மற்றும் 19 அன்று பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version