இந்தியா

3,215 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் நிறுவனம்: காரண்ம இதுதான்!

Published

on

பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்று என்று மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 3215 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெற நிறுவனம் ஒன்று முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது .

மின்சார ஸ்கூட்டர்களை தயார் செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஒகினோ. இந்நிறுவனம் தான் விற்பனை செய்த 3215 மின்சார ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் வாடிக்கையாளர்கள் இருந்து திரும்ப ஸ்கூட்டர்களை பெற்று அதனை சரி செய்து தர உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இது குறித்து ஆய்வு நடத்தி உள்ளதாகவும் இந்த ஆய்வில் மின்சார ஸ்கூட்டர்களில் ஒரு சில சர்வீஸ் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்பிறகு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க வாய்ப்பே இல்லை என்றும் மக்கள் அச்சமின்றி இயக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version