தமிழ்நாடு

32 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு: 3வது அலையா?

Published

on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்றாவது அலை வந்து விட்டதோ என்ற அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வந்தது என்பதும் தற்போது தான் இரண்டாவது அலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை இந்தியாவில் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் 32 பேர் குழந்தைகள் என்பதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே மூன்றாவது அலை தாக்கினால் குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும் என்ற கருத்து சொல்லப்பட்டு வரும் நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சலால் 32 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவலால் மூன்றாவது அலை தோன்றிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் மருத்துவ பரிசோதனைகளை ஆய்வு செய்ய உத்தர பிரதேச மாநில அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version