உலகம்

பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்: 315 மாணவிகளை கடத்தியதால் பெரும் பரபரப்பு!

Published

on

பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால், நைஜீரிய நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நைஜீரிய நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசு கல்லூரி ஒன்றில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட 42 பேரை கடத்திச் சென்றனர். இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் கடத்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களை கண்டுபிடிக்க முடியாமல் நைஜீரிய போலீஸ் திணறி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மேலும் 312 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பள்ளி நடந்து கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 317 பெண் குழந்தைகளை கடத்தி சென்றதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பள்ளிக்கு அருகில் இருந்த ராணுவ முகாம் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்த தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளியிலிருந்து 317 பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளியின் முன் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது குழந்தைகளை இறைவன்தான் காப்பாற்ற வேண்டுமென்று மாணவிகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கண்ணீர் சிந்திய காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளை மீட்க நைஜீரிய நாட்டின் போலீசார் மற்றும் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் விரைவில் கடத்தப்பட்ட பெண் குழந்தைகள் மீட்க படுவார்கள் என்றும் அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version