இந்தியா

31 இந்திய மீனவர்கள் கைது: இம்முறை இலங்கை அல்ல, பாகிஸ்தான்!

Published

on

தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து வருகின்றனர் என்பதும் அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்து இலங்கையில் அவற்றை ஏலம் விட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 13 பேர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகவும் இதனை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் கடற்படை 31 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 37 பேர் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகம் பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் கராச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறையில் ஏற்கனவே 628 இந்தியர்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version