தமிழ்நாடு

தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சிரத்தையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக கோவிட் நேரத்தில் தேர்தலை நடத்துவது என்பது மிகவும் சவாலான காரியம் ஆகும். இந்த நிலையில் வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை சென்னையில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்க தமிழக அரசின் போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதேபோல் வாக்களித்து விட்டு சென்னை திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை என்ற நிலையில் ஏப்ரல் 3, 4 சனி ஞாயிறு விடுமுறை என்ற நிலையில் 6ஆம் தேதி செவ்வாய்க் கிழமையும் தேர்தல் காரணமாக விடுமுறை என்ற நிலையில் இடையில் ஏப்ரல் 5ஆம் தேதி மட்டும் விடுமுறை எடுத்தால் ஐந்து நாட்கள் மொத்தமாக விடுமுறை கிடைக்கும் என்பதால் பலர் சொந்த ஊருக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Trending

Exit mobile version