இந்தியா

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்: முதலமைச்சர் அறிவிப்பு

Published

on

மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மாதம் 300 யூனிட் இலவசம் என அம்மாநில முதல்வர் பகவாந்த்மான் அறிவித்துள்ளார் இதனை அடுத்து அம்மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 73 லட்சத்திற்கு மேல் மின்சார உபயோகிப்பாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் 62 லட்சம் பேர் இந்த இலவச மின்சாரம் மூலம் பயனடைவார்கள் என்றும் 62 இலட்சம் குடும்பத்தினருக்கும் மின்சார கட்டணமே வராது என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி உள்ள பஞ்சாப் அரசு தற்போது மாதம் 300 யூனிட் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் 300 யூனிட் இலவசம் என்ற நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version