இந்தியா

மத்திய அரசு போல கேரள எம்எல்ஏ, அமைச்சர்கள் மாதாந்திர சம்பளம் 30% குறைப்பு!

Published

on

மத்திய அரசு போல, கேரள அரசும் தங்களது மாநில எம்எல்ஏ, அமைச்சர்களின் மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீத ஊதியத்தை ஒரு ஆண்டுக்குக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளால் நிதி ரீதியாக மத்திய மாநில அரசுகளுக்குச் சிக்கல் எழுந்துள்ளது.

அதை சரி செய்ய, மாதம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 6 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், பல்வேறு வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்ட மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீதத்தை ஒரு வருடம் பிடித்தம் செய்ய உள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version