ஆரோக்கியம்

50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

Published

on

பொதுவாக மனிதர்களுக்கு வயது கூட கூட, உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றங்கள் அவசியமாகும். குறைந்த கலோரிகள் கொண்ட அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்துக்குக்  கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியம். அதில் குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்துப் பார்ப்போம்.

முட்டை:

முட்டை என்பது வயது குறைவானவர்கள் மட்டுமல்ல, வயது அதிகமானவர்களும் அதிகம் சாப்பிட வேண்டும். முட்டையில் இருக்கும் சத்துகள் தசைகளுக்கு வலுவளிக்கும். வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 ஃபாட்டி அமிலச் சத்துகளும் முட்டையில் அதிகம் உள்ளது. அதில் இருக்கும் புரதமும் வயதான ஆண்களுக்கு நல்லது. 

பாதாம் பருப்பு:

பாதாம் பருப்பில் உடலுக்குத் தேவையான புரதம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சத்துகள் பொதிந்து கிடக்கின்றன. இதிலிருக்கும் நார்ச்சத்துப் பசியைப் போக்கி, உடலுக்கு ஊட்டம் அளிக்கும். ஒருநாளைக்கு 6 முதல் 10 பாதாம் பருப்புகள் வரை வயதான ஆண்கள் சாப்பிடலாம். 

பீட்ரூட்:

பீட்ரூட் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்தை சீரான ஆரோக்கியத்தில் வைத்துக் கொள்ளும். மேலும் பீட்ரூட்டில் பொட்டாசியம், நைட்ரேட்ஸ் உள்ளிட்ட சத்துகள் அடங்கியிருக்கின்றன. எடை குறைப்புக்கும் பீட்ரூட் உதவிகரமாக இருக்கும். 

உணவுப் பழக்கத்தைத் தவிர்த்து மது அருத்துவது, புகை பிடிப்பது போன்றவற்றை வயதான ஆண்கள் விட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். 

Trending

Exit mobile version