தமிழ்நாடு

3 மாணவிகள், 2 ஆசிரியர்கள்: மூன்றே நாளில் ஐந்து பேர்களுக்கு கொரோனா!

Published

on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதும் மாணவிகள் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பள்ளிகள் திறந்த மறுநாளே நாமக்கல்லில் உள்ள ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இன்று மேலும் 2 மாணவிகளுக்கும், 2 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து மூன்று நாட்களில் மொத்தம் ஐந்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நாமக்கல் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து அரியலூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என ஏற்கனவே எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை தெரிந்த நிலையில், அந்த எச்சரிக்கையை மீறி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறந்த மூன்றே நாட்களில் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் பள்ளி மாணவ மாணவிகள் 80 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version