உலகம்

2018 நோபல் பரிசு: இயற்பியல் சாதனைக்காக 3 பேருக்கு அறிவிப்பு

Published

on

ஸ்டாக்ஹோம்: 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனோ ஆகிய விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இயற்பியலின் லேசர் துறையில் நிகழ்த்திய சாதனைக்காக பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின்”ஆப்டிகல் டிவீசர்ஸ்” எனப்படும் தொழில்நுட்பத்தில் சாதனை நிகழ்த்தியதற்காக விருது அளிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் ஜிரார்டு மவுரு மற்றும் கனடாவின் டோனோ அதே அதிக திறன் கொண்ட மிக மெல்லிய லேசர் ஒலிகளை கண்டுபிடித்த காரணத்திற்காகவும், அதை எப்படி இயக்க வேண்டும் என்று வழிகளை உருவாக்கியதற்காகவும் இந்த பரிசை பெறுகிறார். இவரும் இந்த 6.5 கோடி ரூபாயில் 25 சதவிகிதத்தை பெறுவார்.

seithichurul

Trending

Exit mobile version