பங்கு சந்தை

ஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்!

Published

on

இந்தியாவின் டாப் 10 மதிப்பு வாய்ந்த நிறுவனங்கள் சென்ற வாரம் ஏற்பட்ட சந்தை சரிவில் சிக்கியதில் 3 முக்கிய நிறுவனங்கள் மட்டும் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக டிசிஎஸ் நிறுவனம் மட்டும் 85,330.17-ல் இருந்து 7,19,857.48 ரூபாயாகச் சந்தை மூலதனத்தினை இழந்துள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ், ஐடிசி நிறுவனங்களின் சந்தை மூலதனமும் சரிந்துள்ளது.

அதே நேரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சந்தை மூலதனம் 48,524.59 கோடி உயர்ந்து 7.12.965.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கோடாக் மஹிந்தரா, மாருதி, எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, எச்டிஎப்சி, இந்துஸ்தான யூனிலீவர் லிமிட்டட் நிறுவன சந்தை மூலதனமும் உயர்ந்துள்ளது.

வாரத்தின் முதல் நாளான இன்று காலை 9:45 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 61.71 புள்ளிகள் என 0.16 சதவீதம் சரிந்து 34,679.59 ரூபாயாகவும், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி 24.90 புள்ளிகள் என 0.24 சதவீதம் சரிந்து 10,446.10 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version