சினிமா செய்திகள்

3டியில் வருகிறது பேய் படம்; லீசா டிரைலர் ரிலீஸ்

Published

on

அஞ்சலி நடிப்பில் 3டியில் உருவாகியுள்ள பேய் படம் லீசா விரைவில் வெளியாகவுள்ளது. அதன் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

பி.ஜி. முத்தையா தயாரித்தும் ஒளிப்பதிவும் செய்துள்ள இந்த படத்தை ராஜு விஷ்வநாத் இயக்கியுள்ளார்.

அஞ்சலி, மகரந்த் தேஷ்பாண்டே, யோகி பாபு, பிரம்மானந்தம், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள லீசா திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

டிரைலரை பார்க்கும் அனைவரும், இது ஹாலிவுட் படமான ஈவில் டெட் படத்தை காப்பி அடித்து எடுத்துள்ளனர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

காமெடி பேய் படம் ஓடும் அளவுக்கு பேய் படம் தமிழ் சினிமாவில் பெருமளவில் ஓடுவதில்லை. அதற்கு சமீபத்திய சாட்சி, அவள் மற்றும் பலூன் ஆகிய திரைப்படங்கள், இந்நிலையில், அஞ்சலி நடிப்பில் வெளியாகவுள்ள லீசா திரைப்படம், எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது படத்தின் ரிலீஸுக்குப் பின் தான் தெரிய வரும்.

seithichurul

Trending

Exit mobile version