இந்தியா

வாரத்தில் 3 நாள் விடுமுறை, புதிய ஊதிய விதிகளில் அதிரடி மாற்றங்கள்!

Published

on

அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விதிகளை ஒன்றிய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இதில் ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

புதிய ஊதிய விதியின் கீழ் ஊழியர்கள் பணிபுரியும் நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.

வாரத்திற்குக் குறைந்தது 48 மணி நேரம் ஊழியர் ஒருவர் வேலை செய்தால் போதும்.

பழைய ஊதிய விதிகளின் படி நாளுக்கு 8 மணி நேரம் பணிபுரிந்தால், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை.

புதிய ஊதிய விதிகளின் கீழ் தினமும் 12 மணிநேரம் பணிபுரிந்தால் வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை.

ஊழியர்களின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் 50 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.

அடிப்படை சம்பளம் உயர்ந்தால், பிஎப் பிடித்தம் உயரும். எனவே கைக்கு வரும் சம்பளம் குறையும். ஆனால் ஓய்வுக் காலத்துக்குப் பாதுகாப்பானதாக அமையும்.

உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 300 நாட்கள் வரை விடுமுறை எடுக்க முடியும். முன்பு இது 240 நாட்களாக இருந்தது.

புதிய ஊதிய சட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும்.

புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சமுக பாதுகாப்புக்காக எல்லா சம்பள வடிவங்களிலும் பிஎப் இணைக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version