தமிழ்நாடு

உருமாறிய கொரோனா வேகமாகப் பரவும்… அலட்சியம் வேண்டாம்!

Published

on

புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டு இருப்பதால் பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் அலட்சியம் காட்டாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. இதனால் மக்கள் அலட்சியம் காட்டக் கூடாது. தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிவது, சானிட்டைஸ் செய்வது போன்ற வழிமுறைகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

குளிர் காலத்தில் அதிக மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில் இந்த உருமாறிய கொரோனா வேகமாகப் பரவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 957 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சென்னையில் மட்டும் 286 பேருக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனாவால் அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு உருமாறிய கொரோனா தொற்று இருக்கிறதா என்ற சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version