கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 263 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!

Published

on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டி இந்திய வீரர் புஜாராவின் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

#image_title

முதல் போட்டியை போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். 50 ரன்னில் இந்த ஜோடியை பிரித்தார் ஷமி. இதனையடுத்து வந்த சில வீரர்கள் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும் குறிப்பிட்ட சில வீரர்களின் சிறந்த பங்களிப்பால் அந்த அணி கௌரவமான ரன்னை எடுக்க முடிந்தது.

#image_title

குறிப்பாக உஸ்மான் கவாஜா 80 ரன்னும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆட்டமிழக்காமல் 72 ரன்னும், பேட் கம்மின்ஸ் 33 ரன்னும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேனும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். இறுதியாக அந்த அணி 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்து தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

#image_title

இந்தியா தரப்பில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தற்போது தொடங்கியுள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

Trending

Exit mobile version