கிரிக்கெட்

2-வது டெஸ்ட் போட்டி: 76/4 திணறும் இந்திய அணி, திடீர் சறுக்கல்!

Published

on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் இரண்டாவது நாள் ஆட்டமான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு திடீர் சறுக்கல் ஏற்பட்டு திணறி வருகிறது.

#image_title

முதல் போட்டியை போன்று இந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் சில வீரர்கள் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும் குறிப்பிட்ட சில வீரர்களின் சிறந்த பங்களிப்பால் அந்த அணி கௌரவமான ரன்னை எடுக்க முடிந்தது. குறிப்பாக உஸ்மான் கவாஜா 80 ரன்னும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆட்டமிழக்காமல் 72 ரன்னும், பேட் கம்மின்ஸ் 33 ரன்னும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேனும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். இறுதியாக அந்த அணி 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை எடுத்து தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

இந்தியா தரப்பில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை நேற்று தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 46 ரன்களில் இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனையடுத்து 53, 54, 66 ஆகிய ரன்களில் முறையே அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்தியா தடுமாறி வருகிறது. தற்போது 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் ஜடேஜா தற்போது களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 32 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் 4 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

seithichurul

Trending

Exit mobile version