உலகம்

உயர்ந்த பலி எண்ணிக்கை.. இந்தோனேசியாவில் 373 பேர் பலி.. சுனாமியின் தாண்டவம்!

Published

on

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை யாருமே நினைக்காத நேரத்தில் இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் கடல் அலை பல மீட்டர் உயரம் எழும்பியது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாமலே அந்த பகுதியை இந்த சுனாமி தாக்கி உள்ளது. மொத்தமாக கடல் ஊருக்குள் வந்தது.

இந்தோனேசியாவின் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை இந்த சுனாமி தாக்கி உள்ளது. இங்கு இருக்கும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இதனால் நீரில் மூழ்கி உள்ளது. 1.5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர். 2000 பேர் காயமடைந்துள்ளனர். 1200க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version