தமிழ்நாடு

மேலும் 4 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: மொத்தம் 28 மாவட்டங்களுக்கு விடுமுறை

Published

on

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்கனவே சென்னை உள்பட 24 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்று வெளியான அறிவிப்பை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது மேலும் நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள 28 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்பட 24 மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், சென்னை, கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி தென்காசி விருதுநகர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து மொத்தம் 28 மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version