உலகம்

சீனாவில் ஒரே நாளில் 255 பேர் கொரோனாவுக்கு பலி: நான்காம் அலையா?

Published

on

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 255 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் இருந்து சீனா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது என்பதும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா உள்பட உலக நாடுகளில் கொரோனா படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து மீண்டும் அனைத்து நாடுகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்த நிலையில் சீனாவில் உள்ள வட கிழக்கு நகரங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீனாவில் 4ஆம் அலை தொடங்கிவிட்டதா? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் வடகிழக்கு நகரங்களில் மட்டும் 255 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இதனை அடுத்து அந்த பகுதிகளில் தீவிர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,494 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version