தமிழ்நாடு

நேற்று ஒரேநாளில் ரூ.252.48 கோடிக்கு மது விற்பனை: கொரோனா பாதிப்பிலும் சாதனை!

Published

on

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்றே டாஸ்மாக் கடைகளிலும் மீன் மார்க்கெட்டிலும் கூட்டம் குவிந்திருந்தது என்பதும் அவர்கள் மது வாங்க சென்றார்களா? அல்லது கொரோனாவை வாங்க சென்றார்களா? என்ற சந்தேகம் இருக்கும் அளவிற்கு தனிமனித இடைவெளியின்றி மாஸ்க் அணியாமல் வாங்கியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252.48 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் மற்றும் நேற்று 58 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. மேலும் திருச்சி – ரூ.48.57 கோடி, சேலம் – ரூ.47.79 கோடி, மதுரை – ரூ.49.43 கோடி, கோவை – ரூ.48.32 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நிலையிலும் டாஸ்மாக் விற்பனை மட்டும் குறையாமல் படு ஜோராக நடந்து கொண்டிருப்பது மிகப்பெரிய முரணாகவே பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version