தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25000 அரசு ஊழியர்கள் ஓய்வு!

Published

on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 25,000 பேர் ஓய்வு பெறுகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 60 வயது பூர்த்தியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று 60 வயது பூர்த்தியான 25,000 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் ஆசிரியர்கள் 2000 பேர்கள் என்றும் அரசு ஊழியர்கள் 23 ஆயிரம் பேர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த நிலையில் 2020மே மாதம் 59 வயது என்றும், அதன்பின் கடந்த ஆண்டு 60 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஓய்வு பெறுபவர்கள் வயது உயர்த்தப்பட்டதால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த போதிலும் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஓய்வுபெறும் வயது உயர்த்தப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 60 வயது பூர்த்தியான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர். இதனை அடுத்து அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றதை அடுத்து அந்த காலியிடங்களுக்கான பணியிடங்கள் நிரப்பும் பணி விரைவில் தொடங்கும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேலான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது மேலும் 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version