உலகம்

வேலைநீக்கத்தை எதிர்த்து திடீரென போராட்டம் செய்த கூகுள் தொழிலாளர்கள்: சுவிஸ் நாட்டில் பரபரப்பு..!

Published

on

கூகுள் நிறுவனம் கடந்த மாதம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்ததை உலகில் யாருமே எதிர்பார்க்கவில்லை. பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய அளவில் லாபத்துடன் இயங்கி வருவதாகவும் எனவே அந்த நிறுவனத்திற்கு பொருளாதார பாதிப்பு எதுவும் இருக்காது என்று கணிக்கப்பட்டு வந்தது.

ஆனால் திடீரென 12 ஆயிரம் ஊழியர்களை கூகுள் வேலை நிறுத்தம் செய்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சில நகரங்களில் ஏற்கவே கூகுளின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்த நிலையில் தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் கூகுள் அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று கூகுள் ஜூரிச் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர்கள் மதிய உணவிற்கு பின் திடீரென தங்கள் அறையை விட்டு வெளியேறி அலுவலகத்திற்கு வெளியே பதாகை பலகைகளுடன் வேலை நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பாக போஷமிட்டனர். இந்த அலுவலகத்தில் மட்டும் சுமார் 5000 பேர்கள் வேலை பார்த்தாலும் 250 பேர்கள் மட்டுமே போராட்டம் செய்ததாகவும் இது ஒரு சிறிய பகுதி தான் என்றாலும் இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

ஏற்கனவே நியூயார்க், கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் இதே போன்ற போராட்ட சம்பவம் நடந்த நிலையில் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே ஒரு போராட்டம் நடந்துள்ளது கூகுள் நிறுவனத்தை சற்று கலங்க வைத்துள்ளது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் ஜூரிச் அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் வேலை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் உள்ளூர் சட்டதிட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் சட்டத்திற்கு ஏற்ப கூகுள் நிறுவனம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ஊழியர்கள் மோஷன் விட்டனர்.

இது குறித்து எந்த விதமான உறுதி மொழியையும் கொடுக்க முடியாது என்றும் உள்ளூர் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப எங்கள் விதிகளை மாற்ற முடியாது என்றும் கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version