தமிழ்நாடு
காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? திமுக முடிவு
வரும் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து திமுக முடிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் திமுக தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் 51 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்டதாகவும் ஆனால் 15 முதல் 20 தொகுதிகள் மட்டுமே தருவதற்கு திமுக சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 முதல் 30 தொகுதிகள் வரை தர திமுக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது