தமிழ்நாடு

“25 தொகுதிகள் கொடுத்தா கூட்டணி; இல்லன்னா டாட்டா!”- அதிமுகவுக்கு கெடு வைத்த தேமுதிக

Published

on

கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி ஒப்பந்தத்துக்குத் தயார் என்றும், அதைத் தவிர எதையும் எற்றுக் கொள்ள தயார் இல்லை என்றும் தேமுதிக, கறார் கெடுவை அதிமுக தலைமைக்கு விதித்துள்ளது. இதனால் அதிமுக, விழிபிதுங்கி செய்வதறியாமல் திக்குமுக்காடி நிற்கிறது.

தமிழக ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில், பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சி இந்த முறை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து, 23 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இன்னும் பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறியிலேயே உள்ளது. குறிப்பாக தேமுதிக தரப்பு, தங்கள் சக்தியை மீறிய இடங்களைக் கேட்பதாகவும், இதனால் அதிமுக என்ன செய்வதென்று தெரியாமல் முழிப்பதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்.

அதிமுக தலைமை, தேமுதிகவுக்கு 15 சட்டமன்றத் தொகுதிகளையும், 1 ராஜ்ய சபா சீட்டையும் கொடுப்பதாக இறுதியாக தெரிவித்துள்ளதாம்.

ஆனால் தேமுதிகவோ, 25 தொகுதிகளுக்குக் குறைவாக கொடுத்தால் நாங்கள் கூட்டணி உடன்பாட்டை ஏற்க மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறதாம். இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளர், பார்த்தசாரதி, ‘நாங்கள் அதிமுகவிடம் 25 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். நாங்கள் கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்’ என்று இறுதி கெடுவை விதித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version