சினிமா செய்திகள்

25 கோடி பார்வையாளர்கள்.. சாதனை பேபியான ரவுடி பேபி!

Published

on

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், படத்தின் வெற்றிக்கு பல மடங்கு வெற்றியை படத்தில் இடம்பிடித்த ஒரு பாடலான ரவுடி பேபி சாதித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முதல் 20 கோடி யூடியூப் பார்வைகளை கடந்த தனது சாதனையை, 25 கோடி யூடியூப் பார்வைகளை பெற்று தானே முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில், தனுஷ் பாடலை எழுதி தனுஷும் பாடகி தீ, பாடிய ரவுடி பேபி விரைவில் 30 கோடி பார்வைகளை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

42 நாட்களில் 20 கோடி என்னும் சாதனையை படைத்த ரவுடி பேபி, 55 நாட்களில் 25 கோடி எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரவுடி பேபியின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்திய அளவில் அதிசீக்கிரமாக 25 கோடி பார்வைகளை பெற்ற பாடலில் ரவுடி பேபி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

seithichurul

Trending

Exit mobile version